லிபிய முன்னாள் அதிபர் கடாபி புரட்சிப்படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என லிபிய இடைக்கால தலைமை அமைச்சர் முகமுட் ஜிப்ரி இன்று மாலை லிபிய தலைநகர் திரிபோலியில் நடத்திய செய்தியாளர் மகாநாட்டில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
கடாபி லிபிய புரட்சிப் படையிடம் சிக்கி கால்களில் காயமடைந்த நிலையில் தப்பிசெல்ல முடியாது பிடிபட்டுள்ளார் என செய்திகள் வெளிவந்த போதிலும் அவர் இறந்து விட்டதாக லிபிய இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
அவரின் இறந்த உடலை அல் ஜசீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அவர் இறந்த செய்தி கேட்டு லிபியாவின் நகரங்கள் பலவற்றில் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரங்களில் ஈடுபட்டு வருவதாகவும், துனிசியாவில் அகதிகளாக இருக்கும் லிபிய மக்கள் அங்குள்ள லிபிய தூதரகத்திற்கு முன்னால் மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பனாம் பயணிகள் விமானத்தாக்குதல் உட்பட பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட கடாபி இறந்த இன்றைய நாள் முக்கிய நாளாகும் என பிரித்தானிய தலைமை அமைச்சர் டேவிட் கமரோன் தெரிவித்துள்ளார்.
கடாபி 1969ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 42 ஆண்டுகளாக லிபியாவில் ஆட்சி புரிந்துள்ளார்.இந் நிலையில் கடந்த ஒகஸ்ட் மாதம் 23ம் திகதி கடாபி பதவியில் இருந்து கவிழ்க்கப்பட்டார். நேட்டோ படைகளின் உதவியுடன் லிபிய தலைநகர் திரிபோலியை லிபிய புரட்சி படையினர் கைப்பற்றியதை தொடர்ந்து கடாபி தலைமறைவானார்.
இந்நிலையில் சிர்டேவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கடாபி சுட்டுக் கொல்லப்பட்டதாக லிபிய இடைக்கால அரசு அறிவித்துள்ளது. அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
42 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி புரிந்துவந்த கடாபி உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்படப்போகும் காட்சிகள்
அல்-ஜஸீரா இணையத்தில் வெளியிடப்பட்ட கேர்னல் கடாபியின் மரணத்தின் பின்னரான காட்சிகள்..
Tags
உலகச் செய்திகள்



