15 ஆவது சமூர்த்தி வங்கி சம்மேளனத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் நேற்று திஹாரியில் நடைபெற்றது.

கலோட்டுவாவ சமூர்த்தி வங்கி  சம்மேளனத்தின் 15 ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று திஹாரிய அல்-  அஸ்ஹர் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் 2011 ஆம் ஆண்டுக்கான  சமூர்த்தி வங்கியின் கணக்கு விபரங்கள் சமர்பிக்கப்பட்டதுடன், சமூர்த்தி  சம்மேளனத்தின்  வளர்ச்சிக்காக 2012 ஆம் ஆண்டில் சமூர்த்தி வங்கி நடாத்தவிருக்கும் புதிய செயத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டது. அத்துடன் பாலர் பாடசாலை மாணவர்களின் ஆடல், பாடல் கலை நிகழ்சிகளுடன் இப் பொதுக்கூட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக அத்தனகல்ல பிரதேச சபைத் தலைவர் உபுல் மகிந்திர ராஜபக்ச மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் சஞ்ஜே சிறிவர்த்தன ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் . சிறப்பு அதிதிகளாக அல்-  அஸ்ஹர் மத்திய கல்லூரியின் அதிபர் ஜனாப் M .T .M .  தௌஸீர் மற்றும்,  சமூர்த்தி  சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திருமதி சுரங்கி குணதிலக அவர்களும் மற்றும் பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர். 












                                       புகைப்படங்கள் - அப்துல்லா ஜவ்பர்

Post a Comment

Previous Post Next Post