இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தற்போது ஒலிபரப்பாகி வரும் முஸ்லிம் நிகழ்ச்சிகளை 24 மணி நேரமும் ஒலிபரப்பவுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவரான ஹட்சன் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற முஸ்லிம் சமய வைபம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் மீலாத் நபி தினத்துடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை ஒலிபரப்பை 24 மணிநேர ஒலிபரப்பு செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் தன்னைப் பலரும் ஒரு முஸ்லிமா எனக் கேட்பதாகவும் ஹட்சன் சமரசிங்க இங்கு தெரிவித்தார்.
