இலங்கையின் 64 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் - அனுராதபுரத்தில்


இலங்கையின் 64வது சுதந்திர தின வைபவங்கள் இம்முறை சரித்திரப் புகழ் அநுராதபுரத்தில் நடைபெற ஏற்பாடாகியிருக்கின்றது.

எமது நாட்டை ஆசியாவின் ஆச்சரியமாகக் கட்டியெழுப்புவோம் என்ற தொனிப் பொருளில் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் தலைமையில் இம்முறை சுதந்திர தின விழா மிக விமர்சையாக நடத்தப்பட உள்ளது 

சுதந்திர தின வைபவங்கள் எல்லாம் அனுராதபுர நகர சபை மைதானத்தில் கொண்டாட ஏற்பாடு செய்திருப்பதோடு, முப்படை வீரர்கள், சிவில் பாதுகாப்புப் பிரிவு, பொலிஸ், இளைஞர் படை என்பவற்றைச் சேர்ந்த 2600 பேர் அணிவகுப்பு மரியாதை நிகழ்வில் பங்குபற்றவுள்ளனர்.

விழா காலை 8.30 மணிக்கு பிரமுகர்கள் வருகையோடு ஆரம்பமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சரியாக காலை 9.15 நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். இதனுடன் இணைந்ததாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மத அனுஷ்டானங்கள் நடத்தப்படும்.

பெளத்த மத அனுஷ்டானங்கள் பிரதமர் தி. மு. ஜெயரத்னவின் தலைமையில் ஜயஸ்ரீ மகாபோதிக்கு அருகிலும் இந்து மத அனுஷ்டானங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் அநுராதபுரம் கதிரேசன் கோவிலிலும், கத்தோலிக்க மத அனுஷ்டானங்கள் அமைச்சர் மில்ரோய் பெர்ணாந்துவின் தலைமையில் சென்ஜோசப் தேவாலயத்திலும், முஸ்லிம் மத அனுஷ்டானங்கள் அமைச்சர்களான ரிசாத் பதியுதீன், ஏ. எச். எம். பெளசி ஆகியோரின் தலைமையில் முஹிதீன் ஜும்ஆ மஸ்ஜிதிலும் நடைபெறும்.

தேசிய சுதந்திர தின விழாவின்போது சகல இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 100 மாணவர்கள் தேசிய கீதம் இசைக்க உள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post