முரளி இரண்டாவது முறையாகவும் தந்தையானார்..

இலங்கையின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரான முத்தையா முரளிதரன் ஒரு மகளுக்குத் தந்தையாகி உள்ளார். இவரது மனைவி மதிமலர் இன்று (09) சென்னையிலுள்ள வைத்தியசாலையில் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார். இதனையறிந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாழத்தினையும் வாழ்த்து மலர்களினையும் அனுப்பி வைத்துள்ளார். 2005 ஆம் ஆண்டு இல்லற வாழ்க்கையில் நுழைந்த முரளிதரனுக்கு 2006 ஆம் ஆண்டு நரேன் என்ற ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. தற்போது (2012) பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. 

Post a Comment

Previous Post Next Post