திஹாரிய யூத் கலந்துகொண்ட பிரீமியர் லீக் (பிரிவு 03 ) உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டி இன்று கம்பஹா ஸ்ரீ போதி விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் காலி கெடேரியன்ஸ் விளையாட்டுக் கழகம் 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் திஹாரிய யூத் விளையட்டுக்கழகத்தை வெற்றிகொண்டது.
இன்றைய போட்டி ஆரம்பித்ததிலிருந்து மிகவும் விறு விறுப்பாக நடைபெற்றது. போட்டி ஆரம்பத்திலேயே காலி கெடேரியன்ஸ் விளையாட்டுக் கழகம் ஒரு கோலைப் பதிவி செய்தது. அதனைத் தொடர்ந்து போட்டி மிகவும் விறுவிருப்பாக நடைபெற்றது, என்றாலும் திஹாரிய யூத் வீரர்களுக்கு போட்டிவின் இறுதி வரை கோல் போடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இன்றைய போட்டியில் வெற்றியீட்டிய காலி கெடேரியன்ஸ் விளையாட்டு கழகத்திற்கு ரூபா ஒரு இலட்சம் பணப்பரிசும், இரண்டாம் இடம் கிடைத்த திஹாரிய யூத் இற்கு ஐம்பது ஆயிரம் ரூபாய்களும், போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் மெடல்களும் பரிசுகளாக வழங்கப்பட்டது. இப் போட்டியை முன்னிட்டு நிட்டம்புவ PC FRIENDS நிறுவனத்தின் அனுசரணையில் திஹாரிய யூத் கழகத்திற்கு ஐம்பது ஆயிரம் ரூபாய் பெறுமதியான உதைபந்தாட்ட உடைகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இப்போட்டிக்கு விஷேட அதிதிகளாக அமைச்சர்களான சரண குணவர்தன, லசந்த, அத்தனகல்ல பிரதேச சபை தலைவர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ, அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர்களான குஜி ஹனீபா, அஷ்ரப் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

