கண்டி வீதியில் அமைந்துள்ள திஹாரியின் பிரதான ஜும்மா பள்ளிவாசல்களில் ஒன்றான மஸ்ஜிதுல் அமீனிய்யா பள்ளிவாசலை முழுமையாக புணர்நிர்மானம் செய்ய பள்ளிவாசல் நிர்வாக சபை முடிவெடுத்துள்ளது.
மிக அழாகான முறையில் காம்பீரமான தோற்றத்துடன், அதிகமானவர்கள் தொழக்கூடிய வசதிகளுடன் பள்ளிவாசலை புணர்நிமானம் செய்வதற்கான அனைத்து முன் ஆயத்தங்களையும் பள்ளிவாசல் கட்டிட நிர்வாக சபை திட்டமிட்டுள்ளது. இதில் பிரயாணத்தில் ஈடுபடும் பெண்களுக்கும் தொழுகைக்கான வசதிகள் செய்யப்படவுள்ளது.
இப்பள்ளிவாசலை முழுமையாக கட்டிமுடிப்பதற்காக ஆறு கோடி ரூபாய்கள் தேவைப்படுகின்றது. இதன் முதல்கட்டமாக ஊர்மக்களிடம் இருந்து சேகரிக்கும் நோக்கில் இன்று ஜும்மா தொழுகைக்குப்பின் 1000 ரூபாய்கள் பெறுமதியான டிக்கட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.
அல்லாஹ்வின் மாளிகையைக் கட்டிமுடிக்க எமது ஊரைச்சேர்ந்த வெளிநாட்டில் தொழில் புரியும் எமது உறவுகளும் பங்கேற்கலாம். இதற்காக உங்களால் முடிந்த உதவிகளை பள்ளிவாசலின் வங்கிக்கணக்கில் வைப்புச் செய்யலாம்.
இதற்கான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
MASJIDUL AMEENIYA ACCOUNT NO:-
----------------------------------------------------------
Masjidul Ameeniya Jumma Mosque -Thihariya
PEOPLE’S BANK –NITTAMBUWA BRANCH
Current A/C No : 278-1001-20001556
----------------------------------------------------------
Masjidul Ameeniya Jumma Mosque - Thihariya
ISLAMIC SERVICES ASSOCIATION (I.S.A)
A/C No : 0685
----------------------------------------------------------
Tags
திஹாரிய செய்திகள்



