சுயதொழில் வேலைவாய்ப்பு பயிற்சிநெறியின் பரிசளிப்பு விழாவும், கண்காட்சியும்.


மேல் மாகாண சபை இரண்டாவது முறையாகவும் நடாத்திய சுயதொழில் வேலைவாய்ப்பு பயிற்சிநெறியின் கண்காட்சியும், பரிசளிப்பு விழாவும் இன்று திஹாரிய அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.


மேல் மாகாண சபை உறுப்பினர் அல் ஹாஜ் சாபி ரஹீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில்  நடைபெற்ற இப்பயிற்ச்சி நெறியில் சமையல் மற்றும்  தையற்கலைகளை தொழில் ரீதியாக செய்வதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற இப்பயிற்சிநெறியில் கலந்துகொண்ட மாணவியர்களின் கண்காட்சி இன்று காலை 10 மணிமுதல் அல்-அஸ்ஹரில் நடைபெற்றது . இக் கண்காட்சியை அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரி அதிபர் ஜனாப் தௌஸீர் திறந்துவைததார் .  

அதனைத்தொடர்ந்து பயிற்சிநெறியில் கலந்துகொண்டு வெற்றிகரமாக நிறைவுசெய்த மாணவிகளுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும், வழங்கும் நிகழ்வு மாலை நடைபெற்றது. இன் நிகழ்வில்  மேல் மாகாண சபை உறுப்பினர் அல் ஹாஜ் சாபி ரஹீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். தையற்கலை வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்றுக்கொண்ட  மாணவிகளுக்கு தையல் இயந்திரங்களும், சமையற்கலை வகுப்பில்  முதல்  மூன்று இடங்களை பெற்றுக்கொண்ட மாணவிகளுக்கு கேஸ் குக்கர்களும் பரிசில்களாக வழங்கப்பட்டடது. 











புகைப்படங்கள் - அப்துல்லா ஜவ்பர்

Post a Comment

Previous Post Next Post