பாவனைக்கு உதவாத நாணயங்கள் சேகரிக்கும் பணியில் மத்திய வங்கி



பாவனைக்கு உதவாத நாணயக்குற்றிகள் மற்றும் தாள்களை சேகரிக்கும் நடவடிக்கைகளை இலங்கை மத்திய வங்கி ஆரம்பித்துள்ளது.

நாடளாவிய ரீதியிலும் இந் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. முதற்கட்டமாக பத்து ரூபா, இருபது ரூபா மற்றும் ஐம்பது ரூபா தாள்களை சேகரிக்கவுள்ளதாக மத்திய வங்கியின் தலைவர் அஜித் நிவாட் கம்ரால் தெரிவித்துள்ளார்.

பணப்புழக்கம் அதிகம் உள்ள இடங்களான வியாபார நிலையங்கள், பாடசாலைகள் மற்றும் ஏனைய இடங்களிலும் பாவனைக்கு உதவாத நாணயத்தாள்களை சேகரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியினால் சேகரிக்கப்படும் பாவனைக்கு உதவாத நாணய தாள்களுக்கு அதே பெறுமதியான நாணய தாள்கள் மத்திய வங்கியினால் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post