ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (ஜம்மிய்யத் தளபா ) வின் திஹாரிய கிளை ஏற்பாடு செய்த வருடாந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
உறுப்பினர்கள் இடையே ஒற்றுமையையும், குழுச் செயற்பாட்டையும் அதிகரிக்கும் நோக்கில் ஐந்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட, அணிக்கு ஆறுபேர் அடங்கிய ஆறு அணிகள் கொண்ட நட்புறவுப் போட்டியாக இது அமைந்திருந்தது.
இப்போட்டியில் வெற்றிகிண்ணத்தை ஜம்மியா "வினர்ஸ்" தனதாக்கிகொண்டதுடன், ஜம்மியா "செலன்ஜெஸ்" இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது. தொடரின் ஆட்டநாயகனாக சகோதரர் அப்துல் அஸீஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
இன் நிகழ்சிக்கு பிரதம அதிதியாக அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரி அதிபர் ஜனாப் எம்.டி.எம். தௌஸீர் (நளீமி) அவர்களும். விஷேட அதிதிகளாக ஜமா அத்தே இஸ்லாமியின் மூத்த உறுப்பினர்கள் சிலரும் கலந்து சிறப்பித்தனர்.
Tags
திஹாரிய செய்திகள்





