நிட்டம்புவ அரச துறைக்குச் சொந்தமான பஸ் சேவைகள் நேற்றிலிருந்து வேலை நிறுத்தம் செய்துள்ளது. அது தொடர்பாக இன்று பகல் ஒரு மணி க்கு நிட்டம்புவ பிரதான பஸ் தரிப்பு நிலையத்துக்கு முன்னாள் சகல ஓட்டுனர்களும், பஸ் நடத்துனர்களும் பதாதைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து தமது எதிர்ப்பைத் தெரிவித்தது தங்களுடைய ஊதியங்களை செலுத்துமாறு கோரிக்கை விட்டனர். இந்த பகிஷ்கரிப்புப் பணியால் பொது மக்கள் மிகவும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. இது வரைக்கும் பஸ் சேவை ஆரம்பிக்கப்படவில்லை.
படப்பிடிப்பு : முராத் அஹமத்
படப்பிடிப்பு : முராத் அஹமத்
Tags
திஹாரிய செய்திகள்
