பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஹஜ் குழுக் கூட்டம் கடந்த 17-02-2012 ஆம் திகதி சம்மேளன தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் தலைமையில் சம்மேளன சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்வருடம் ஹஜ் கடமைக்கு செல்வோர் தம்மை முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் மீளப் பெற்றுக் கொள்ளக் கூடிய 25000.00ரூபா முற்பணம் செலுத்தி தமது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு ஹஜ் குழுவின் தலைவரும் அமைச்சருமான ஏ.எச்.எம்.பௌசி வேண்டுகோள் விடுத்துள்ளதால் சம்மேளனத்தினூடாக இம்முறை ஹஜ்ஜு செய்வதற்கு முடிவெடுத்துள்ளவர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழுகையின் பின் சம்மேளன காரியாலயத்தில் தமது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு சம்மேளன ஹஜ் ட்ரவல்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்வருடம் சவூதி ஹஜ் அமைச்சு இலங்கைக்கு 2800 பேருக்கு மாத்திரமே ஹஜ் கோட்டா வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
