இன்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் எமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று. சரி எப்படி எங்களிடம் இருக்கும் இன்டர்நெட் இணைப்பில் முழுமையான வேகத்தை பெற்றுக்கொள்வது? இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) உள்ள கணினி வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த முறை செல்லுபடியாகும்.
முதலில் Start Button -ஐ அழுத்தி Run என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை அழுத்த வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி (Computer Configuration ) என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை தெரிவுசெய்ய வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை தெரிவுசெய்து Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Apply பின்பு Ok பொத்தானை அழுத்தி வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை Restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்.
நன்றி விண்மணி
Tags
தொழில்நுட்பம்

