பாகிஸ்தானில் விமான விபத்து: 118 பேர் உயிரிழப்பு. (வீடியோ இணைப்பு)



பாகிஸ்தானில் இஸ்லாமாபாத்துக்கு அருகே பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 118 பேர் பலியாகி உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றது. 110 பயணிகள் மற்றும் 17 ஊழியர்கள் உட்பட 127 பேர் பயணம் செய்த தனியார் பயணிகள் விமானம் கராச்சியிலிருந்து இஸ்லாமாபாத் செல்லும் போது விழுந்து நொறுங்கியது. மோசமான வானிலை காரணமாக விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், விபத்துக்குள்ளான விமானம் போஜா ஏர் என்ற தனியார் விமான நிறுவனத்துக்கு சொந்தமானதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.


காவல் துறையினருடன் இணைந்து ராணுவமும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.100 பேர் கொண்ட ராணுவக் குழு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும்,  விழுந்து நொறுங்கிய விமானத்தின் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால் உடல்களைத் தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.




Post a Comment

Previous Post Next Post