ஏற்கனவே கூறியதுபோன்று இனவாத சக்திகளின் கூட்டம் இன்று மாலை தம்புள்ள பிரதேச செயலகக் கட்டிடத்தில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுமார் 1500 இற்கும் மேற்பட்ட போலீஸ் மற்றும் அதிரடி படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்பட்டிருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக் கூட்டத்தில் புத்தசாசன அமைச்சின் செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர் உட்பட தேரர்களும் கலந்து கொண்ட போதிலும் , எந்த ஒரு முஸ்லிம் முக்கியஸ்த்ர்களோ பள்ளிவாயல் நிருவாகிகளோ கலந்து கொள்ளவில்லையெனவும் தெரிய வருகின்றது.
அதேவேளை இன்று தமக்கு சாதகமான தீர்வு கிடைக்கா விட்டால் இன்று பள்ளியை உடைப்போம் என்று தெரிவித்திருந்த இனவாத தரப்பு, இன்றைய கூட்டத்தின் பொது தம்புள்ள மஸ்ஜிதுல் ஹைரியா பள்ளிவாசலை 6 மாதத்திற்குள் அகற்றப்பட வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.
தம்புள்ளையில் புனித பிரதேச மெனக் கூறப்படும் இடத்திற்குள் 72 சட்டவிரோத கட்டிடங்கள் இருப்பதால் அதை அகற்றிவிடுவதென இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இந்த 72 கட்டிடங்களுக்குள் தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயல் மற்றும் தம்புள்ள இந்து காளிகோயில் என்பனவும் அடங்கும்.
இந்த நிலையில் முஸ்லிம்கள் ஒன்றுமையாக மஸ்ஜிதின் இருப்பு தொடர்பான அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபையின் வழிகாட்டலில் செயல்படவேண்டும். சொந்த அரசியல் இலாபங்களுக்காக பிரிந்து நின்று வேறுவிதமாக பிரச்சினையை அணுக முற்படுவது மிகவும் பாதகமான முடிவை தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
