மின்சாரத்தை சிக்கனமாகப் பாவிப்போருக்கு புதிய சலுகைகள் அறிமுகம்



ஏப்ரல் 1ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் ஏப்ரல்,மே,ஜூன் ஆகிய மாதங்களில் 10 சதவீதம் மின்சாரத்தை குறைவாகப் பாவிப்பதனால் 50 சதவீத மின்கட்டண கழிவை வழங்குவதற்கு மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. மேலும் 20% குறைத்து பாவனை செய்தால் ஒரு மாதத்திற்கான மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். நாளைய தினத்துக்காக இன்று மின்சக்தியை பாதுகாப்போம் என்ற கருப்பொருளின் பிரகாரம் இத்திட்டம் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் பங்குபற்றுவதற்கு மின் நுகர்வோர் எஸ்.எம்.எஸ். மூலம் தங்களைப் பதிவுசெய்ய வேண்டும். நீங்கள் இலங்கை மின்சாரசபையின் நுகர்வோராக இருந்தால், ‘L இடைவெளி இலங்கை மின்சார சபையின் உங்கள் கணக்கு இலக்கம்’ என்பவற்றைக் குறிப்பிட்டு 0114 338338 என்ற இலக்கத்திற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும். லெகோ மின் நுகர்வோராக இருந்தால், ‘ESC இடைவெளி லெகோ மின்பாவனை இலக்கம்’ என்பவற்றைக் குறிப்பிட்டு 0714 643643 என்ற இலக்கத்திற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும்.

Post a Comment

Previous Post Next Post