இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவை அண்டிய பிரதேசத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 8.9 , 8.6ஆக இரு நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேசியா அரசாங்கம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையிலும் பல இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதேநேரம் இந்த இரு நிலநடுக்கங்களையும் திஹாரியிலும் உணரமுடிந்தது, பிற்பகல் 2 .30 மற்றும் மாலை 4 .30 மணியளவுகளில் இந்த அதிர்வை எம்மால் உணரமுடிந்தது.
