ஐக்கிய தேசியக்கட்சியின் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் M .S .M . அஷ்ரப் அவர்களின் நிதி ஒதிக்கீட்டின் கீழ் திஹாரியில் கட்டப்படவுள்ள 25 குப்பைத் தொட்டிகளில் முதலாவது குப்பைத் தொட்டி ஊர்மனை வயல் அருகாமையில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 40 ஆயிரம் ரூபாய்கள் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த தொட்டி இன்னும் சில நாட்களில் மக்கள் பாவனைக்காக திறக்கப்படவுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் M .S .M . அஷ்ரப் அவர்கள் திஹாரிய நியூஸ் இணையத்தலத்திற்கு தெரிவித்தார். இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக இரண்டாம், மூன்றாம் தொட்டிகள் நாப்பிரித்த மற்றும் பெதனிபொல பகுதிகளில் கட்டப்படவுள்ளது.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் அரசியல் வாக்குறுதிகளை மிகக் குறுகிய காலத்தில் நிறைவேற்றும் நோக்கில் தனது நிதி ஒதிக்கீட்டின் கீழ் இருந்து இது போன்ற குப்பைத் தொட்டில்கள் சுமார் 25 ஐ திஹாரியில் பல்வேறு இடங்களில் கட்டவுள்ளதாக தெரிவித்தார் .
Tags
திஹாரிய செய்திகள்


உண்மையிலேயே வரவேற்கத்தக்க முன்மாதிரியான சேவை. உங்கள் சேவைகளுக்க எனது மனமார்ந்த நன்றிகள்
ReplyDelete