அண்மையில் கனடாவில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் விழாவுக்கு (CRICKET ALL-STAR T20 MATCH) வந்த கிரிக்கட் வீரர்களை விழா அமைப்பாளர்கள் நாடு ரோட்டில் விட்டனர்.
விடயம் அறிந்து தொடர்பு கொண்ட கலாபம் ஸ்தாபகர் ரஞ்சிதனுக்கு இலங்கை அணியின் பிரபல விளையாட்டு வீரர் சனத் ஜெயசூரியா அளித்த பிரத்தியோக பேட்டியில் நடந்தவற்றை பின்வருமாறு விபரித்தார். இந்த கிரிக்கெட் போட்டிக்காக கனடா வரும் முன் 50% சம்பளத்தையும் மற்றும் விமான டிக்கெட், ஹோட்டல் செலவுகளையும் விளையாட்டு விழா அமைப்பாளர்கள் தருவதாகவும், பின்னர் கிரிக்கெட் போட்டி முடிவடைந்த பின் மிகுதி சம்பளத்தைத் தருவதாகவும் ஒபந்தம் செய்யப்படிருந்தது.
ஆனால் கிரிக்கெட் போட்டி நடைபெற சில நாட்கள் மட்டுமே இருந்த தருவாயில் அவர்கள் தன்னிடம் தொடர்பு கொண்டு பணம் அனுப்புவதில் பிரச்னை இருப்பதாகவும், உங்கள் பணத்தில் டிக்கெட் போட்டு கனடாவுக்கு வருமாறும், வந்தவுடன் சம்பளத்துடன் தருவதாகவும் தெரிவித்தனர். அவர் கனடாவுக்கு வந்த பின்னர் மிகவும் பிரபல்யமான ஹோடேலில் தங்குவதற்கு அமைப்பாளர்கள் ஒழுங்கு செய்திருந்தனர். விளையாட்டு தொடங்கும் வரை எவருக்குமே ஒருவித பண பரிமாற்றமும் செய்யவில்லை. எல்லா வீரர்களுக்கும் ஒரே மாதிரியான கதை தான் நடந்திருந்ததை விளையாடுவதற்கு சற்று முன் தான் தெரிய வந்தது.
இதனால் கோபமடைந்த மேற்கிந்திய தீவு வீரர் பிரையன் லாரா கடைசி நிமிடத்தில் விளையாட மறுத்து விட்டார். தனது ரசிகர்களுக்காக தான் விளையாட சம்மதம் தெரிவிதாதாக ஜெயசூரியா தெரிவித்தார். தான் எத்தனையோ இடங்களில் விளையாடி இருக்கின்றேன் ஆனால் இது போன்ற கீழ்த்தரமான சம்பவம் இதுதான் முதல் முறையாக நடந்ததாக தெரிவித்தார். அது மட்டும் இல்லாமல் ஹோட்டல் செலவுகளையும் தானே கொடுத்ததாகவும் கூறினார். இன்று லண்டன் புறப்பட்டு சென்ற ஜெயசூரியா புதன் கிழமை நாடு திரும்ப உள்ளார்.



