திஹாரிய மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள மர்மப் பெண்ணின் நடமாட்டம் என்ன? வீடியோ இணைப்பு.



நமது கிராமத்திற்கு அருகாமையில் உள்ள "போனகல" என்ற பிரதேசத்தில் இரவு வேளையில் மர்ம நடமாட்டங்கள் நிகழுவதாக கடந்த சில தினங்களாக பரவிவரும் தகவல் காரணமாக எமது ஊரிலும் மக்கள் பெரும் அச்சமடைந்து இருக்கிறார்கள். இந்த மர்ம நடமாட்டத்திற்கு நேரடியாக முகம் கொடுத்த எமது ஊரைச் சேர்ந்த இருவரும் ஒரு சிங்கள இணையத்தளத்திற்கு வழங்கியிருக்கும் நேர்காணலை உங்களுக்காக வாங்குகிறோம். 






(மர்மப் பெண் இருப்பதாக கூறப்படும்  இடங்கள்)

இவர்கள் கூறும்  இந்த விடயங்கள்  உண்மையா? 
இந்த விடயம் தொடர்பாக எமது செய்திப்பிரிவின் தொலைபேசி இலக்கத்திற்கு பல அழைப்புக்கள் வந்த வண்ணம் இருந்தன. ஆகையால் இதன் உண்மை நிலவரத்தை ஆராயும் முகமாக எமது செய்திக்குழு சம்பவம் நடைபெறுவதாகக் கூறப்படும் "போனகல" பிரதேசத்திற்க்கு சென்றது. இதன்போது என்ன நடந்து என்பதை கீழேயுள்ள வீடியோவைப் பார்த்து உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ளலாம்.


இதன் போது எடுக்கப்பட்ட இன்னும் சில வீடியோ காட்சிகளை தொடர்ந்தும் எமது இணையத்தளத்தில் எதிர்பாருங்கள்...


குறித்த இடத்தில் இரவு வேளையில் நடமாடப்படுவதாக கூறப்படும் "அமாலி" எனும் பெண்ணைப்பற்றி சில தகவல்கள்:



"யக்கல போனகல" பிரதேசத்தை சேர்ந்த "அமாலி"  கணனித்துறையில் தேர்ச்சி பெற்ற ஒருவர். இவர் "கிரிகித்தமுள்ள" பிதேசத்தில் வசிக்கும் "விராஜ் சின்தக" என்பவருடன் காதல் வயப்பட்டு, கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் தனது காதலன் சகிதம் சுமார் 12 பேர் கொண்ட நண்பர்கள் குழுவுடன் நுவரேலியாவிற்கு சுற்றுலா சென்ற சமயத்தில் இரவு BBQ பார்ட்டியை முடித்துவிட்டு நித்திரைக்காக சென்றுள்ளனர். நுவரெலியாவில் நிலவும் கடுமையான குளிர் காரணமாக BBQ  போடப்பட்ட சூடான தட்டை தாம் உறங்கும் அறைக்குள் வைத்துவிட்டு நித்திரைக்குச் சென்ற இருவரும் காலை எழுந்து பார்த்தபோது சுயநினைவற்று கிடந்தார்கள். உடனடியாக செயல்பட்ட நண்பர்கள் குழு, இருவரையும் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதிலும் இருவரினது உயிர்களையும் காப்பாற்ற முடியாமல் போனது. BBQ  போடப்பட்ட சூடான தட்டிலிருந்து வெளியேறிய காபன் வாயுவை சுவாசித்ததன் விளைவாக இருவரினதும் மரணம் நிகழ்ந்துள்ளது என்று மரண பரிசோதனையின் போது கூறப்பட்டது. 
(உசாத்துணை  - அத்தனகல்ல இணையம் )


*********************************************************************************************

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்.)

(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். (114:1)

(அவனே) மனிதர்களின் அரசன்; (114:2)

(அவனே) மனிதர்களின் நாயன். (114:3)

பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). (114:4)

அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். (114:5)

(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர். (114:6)

(அல்- குர்ஆன் - ஸூரத்துந் நாஸ்)
*********************************************************************************************

சுட்டிக்காட்டுவது நாங்கள் ...   தட்டிக்கேட்பது நீங்கள் ... 

Post a Comment

Previous Post Next Post