முன்னால் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவின் மகள்களான அப்சரா, அபர்ணா ஆகியோர் இன்று (19) கொழும்பு நவலோக்க வைத்தியசாலைக்கு தனது தாய் அனோமா பொன்சேக்கா சகிதம் சென்று தந்தை சரத் பொன்சேக்காவைப் பார்வையிட்டனர்.
சிறைத்தண்டனை அனுபவித்துவரும் தந்தை விடுதலை செய்யப்படுவதாக கிடைத்த செய்தியுடன் அமெரிக்காவிலிருந்து இலங்கை புறப்பட்டதாக முன்னால் இராணுவத் தளபதியின் மகள்மார் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கையில் கூறினார்கள்.

