முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது, இராணுவத்திலிருந்து தப்பி சென்ற வீரர்களை தங்கவைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சரத் பொன்சேகாவிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் அவரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
