தற்பொழுது நடைபெற்று வரும் இந்திய பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டி நிர்ணயத்துக்காக இலங்கை வீரர் ஒருவருக்கு தாம் 10 கோடி ரூபாவை வழங்கியதாக ஆட்டநிர்ணயக்காரர் ஒருவர் சாட்சியமளித்துள்ளார். அத்துடன் இதில் சில இந்திய வீரர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கட் ஆட்ட நிர்ணயம் தொடர்பில் மலாட் என்று அழைக்கப்படும் சோனு யோகேந்திரா ஜலான் என்பவரும் பஹாஜி என்றழைக்கப்படும் தேவேந்திரா கோத்தாரி என்பவரும் கடந்த வியாழக்கிழமையன்று மும்பாயில் வைத்து குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்கள் சர்வதேச ரீதியில் கிரிக்கட் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடுகின்றவர்கள் என்று நம்பப்படுகிறது. தகவல்களின்படி சோனு என்ற கிரிக்கட் போட்டி நிர்ணயக்காரர், தமது சட்டவிரோத வர்த்தகத்தின் மூலம், மாதம் ஒன்றுக்கு 500 கோடி ரூபாவை வருமானமாக பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, சவூதிஅரோபியா மற்றும் இந்தியா ஆகிய இடங்களில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். (வெளிநாட்டு ஊடகங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்)
