ஐபோன்களின் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த Xperia GX கையடக்கத் தொலைபேசிகள் தொடர்பான அறிவித்தலை உலகில் பிரபல நிறுவனமான சோனி நிறுவனம் வெளியிட்டுள்ளது. Android (4.0.3) இயங்குதளத்தை கொண்ட இந்த கையடக்கத் தொலைபேசி, 13 மெகா பிக்சல் கமெராவை உள்ளடக்கியுள்ளது.
இத் தொலைபேசியின் கீழ் பகுதியில் "SONY" நிறுவனத்தின் இலட்சினை பொறிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் "Sony Ericsson " எனும் பெயரில் கையடக்கத் தொலைபேசிகள் வெளிவராது என்பது குறிப்பிடத்தக்கது.
இக் கையடக்கத் தொலைபேசி இந்த வருடத்தின் இறுதி காலண்டுப்பகுதியில் வெளிவரலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
Tags
தொழில்நுட்பம்
