விமர்சையாக நடந்து முடிந்த ஜம்இய்யத் தளபாவின் பாராட்டு விழா - 2012


ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் திஹாரியக் கிளையின் ஏற்பாட்டில், திஹாரிய அல் -  அஸ்ஹர் மத்திய கல்லூரியில் தமிழ், ஆங்கில மொழிகளில் கற்று தரம் 5, க. பொ. த. (சா/ தர) அரச பரீட்சைகளில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி, கௌரவிக்கும் "பாராட்டு விழா - 2012 " இன்று மாலை திஹாரிய அல் -  அஸ்ஹர் மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. 


மாலிக் மற்றும் முர்ஷிட் ஆகியோரின் கிராஅத் ஓதலுடன் ஆரம்பமாகிய இவ் விழாவில் பிரதம அதிதியாக திஹாரிய அல் -  அஸ்ஹர் மத்திய கல்லூரியின் அதிபர் M . T . M . தௌசீர்  (நளீமி) அவர்களும், விஷேட பேச்சாளராக அஷ்ஷெக் சஹ்ரீன் (கபூரி) அவர்களும். சிறப்பு அதிதிகளாக  ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் தலைவர் முன்ஷிப், அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் அஷ்ரப்,  அல் -  அஸ்ஹர் மத்திய கல்லூரியின் பிரதி அதிபர்களான சஹ்தியா ஆசிரியை மற்றும் ஹலீம் ஆசிரியர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 












அத்துடன் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் திஹாரியக் கிளை நடாத்திய "மதாஹில்" கற்கை நெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கும் சான்றிதல்கள் வழங்கப்பட்டது.



Post a Comment

Previous Post Next Post