இலங்கையில் நேரடியாக காணும் வாய்ப்பு
சூரியனை நேரே பார்த்தால் கண் பார்வை இழப்பு
சூரியனை வெள்ளிக் கிரகம் கடந்து செல்லும் நிகழ்வு எதிர்வரும் 6ம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வினை இலங்கை மக்கள் 6ம் திகதி காலை 7 மணியளவில் அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
சூரிய வட்டத்தின் ஊடாக வெள்ளிக்கிரகம் நகர்ந்து செல்வதை வெள்ளிக்கிரகத்தின் சூரிய கடப்பு என தெரிவிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் வெள்ளிக்கிரகம் ஒரு சிறிய புள்ளி போல சூரியனின் முன்பாக ஊர்ந்து செல்வது போல காணலாம். புதன் மற்றும் வெள்ளிக்கிரகங்களின் சுற்றுப்பாதைகள் பூமியின் சுற்றுப்பாதையின் உட்புறமாக அமைந்துள்ளன.
எனவெ இந்த நிகழ்வை இன்று பார்ப்பவர்கள் தங்களின் வாழ்நாளில் இது அடுத்த முறை நடப்பதை பார்ப்பதற்கு வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.
தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இப்படி வெள்ளி சூரியனை கடக்கும் நிகழ்வு இதுவரை ஏழு முறை மட்டுமே (1631, 1639, 1761, 1769, 1874, 1882, 2004 ஆம் ஆண்டுகளில்) நடந்திருக்கிறது. செவ்வாயன்று இரவு நடக்க இருப்பது எட்டாவது நிகழ்வு.
தொலை நோக்கி கொண்டு சூரியனின் பிம்பத்தை வெண் திரையில் விழச் செய்து பார்த்தால் சூரியனின் குறுக்கே கறுப்பு புள்ளி போன்ற தோற்றத்துடன் வெள்ளிக்கிரகம் கிழக்கில் இருந்து மேற்காக கடந்து செல்வதை காணலாம்.
வெள்ளியுடன் சூரியப் புள்ளிகளும் தெரியும். ஆனால் வெள்ளியை காட்டிலும் சூரியப்புள்ளிகள் சற்று ஒளியுடன் இருப்பதை காணலாம்.
சூரியனை வெள்ளி கடக்கும் போது தொலைநோக்கி, பைனாக்குலர் போன்ற உருப்பெருக்கி கொண்டு பார்க்கலாம். சூரியனை நேரடியாக பார்க்க கூடாது.
அவ்வாறு பார்த்தால் பார்வை இழக்க நேரிடும். சூரியனின் பிம்பத்தை ஒரு வெண் திரையில் விழச் செய்து அதை காணலாம்.
உசாத்துணை : தினகரன் மற்றும் BBC தமிழ்
Tags
உலகச் செய்திகள்
