முஸ்லிம் சமூகத்திற்கு விரோதமாக இயங்கும் இணையதளங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் முறைப்பாடு!


கடந்த சில தினங்களாக 10 இற்கும் மேற்பட்ட இணையத்தளங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்ட வகையில் மிக மோசமான முறையில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஒரு சில தினங்களுக்கு முன்னர் மஹரகம அரபுக் கல்லூரியில் எற்பாடு செய்யப்பட்டிருந்த தலைமைத்துவ கருத்தரங்கிற்கான அழைப்பிதழை ஜிஹாத் பயிற்சி கருத்தரங்கு என்று மாற்றி இணையத்தளங்களில் போடப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் இவ்வாறான நிலைமை தொடர்ந்தால் யுத்தத்தினால் ஏற்பட்ட சமாதானம் சீர்குலைந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார் .

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அலரி மாளிகையில் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களையும் இலத்திரனியல் செய்திப் பிரிவு பொறுப்பாசிரியர்களை சந்தித்து பேசிய போது இந்த விடயம் தொடர்பாகவும் அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Post a Comment

Previous Post Next Post