DNS Changer எனப்படும் வைரஸ் தாக்கத்திற்கு இலக்கான கணணிகள் மூலம் இன்று முதல் இணையத்தள வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு இந்த கணணி வைரஸ் இனங்காணப்பட்டதாக மொறட்டுவை பல்கலைக்கழக கணணி விஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் கிஹான் டயஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிகாரிகள் மேலும் சில தரப்பினருடன் இணைந்து மேறகொண்ட நடவடிக்கையின்போது குறித்த வைரஸை உருவாக்கியவர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து டீ.என்.எஸ். ச்சேன்ஜர் வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
இந்த வைரஸ் தாக்கத்திற்கு இலக்கான கணணிகளை இணையத்தள வசதிகளை பெற்றுக்கொள்வதற்கு முற்படும் போது அது வைரஸுடன் தொடர்புடைய வேறொரு இணையத்தளத்திற்கு பிரவேசிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வைரஸினால் சுமார் ஐந்து இலட்சம் கணணிகள் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ள நிலையில் அந்த கணணிகளில் இருந்து இந்த வைரஸை அழிக்கும் நடவடிக்கையை அமெரிக்க அதிகாரிகள் மேற்கொண்டு தற்போது பெரும்பாலான கணணிகளில் இருந்து அந்த வைரஸ் அகற்றப்பட்டுள்ளதாகவும் மொறட்டுவை பல்கலைக்கழக கணணி விஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் கிஹான் டயஸ் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அமெரிக்க அதிகாரிகள் இன்றுடன் அந்த அதிகாரிகள் இன்றுடன் அந்த நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவருவதாக அறிவித்துள்ள நிலையில், இதுவரை வைரஸ் அகற்றப்படாத கணணிகளில் இணையத்தள வசதிகளை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பிரச்சினைகள் இருக்குமாயின் http://www.dcwg.org/ என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து அங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பற்றுமாறு பேராசிரியர் கிஹான் டயஸ் மேலும் தெரிவித்துள்ளார்
நன்றி: நியூஸ் 1st
Tags
தொழில்நுட்பம்

