"Thihariya Challenge Trophy" உதைப்பந்தாட்டப் போட்டி - 2012


திஹாரிய யூத் விளையாட்டுக்கழகம் முதல் தடவையாக ஏற்பாடு செய்துள்ள "Thihariya Challenge Trophy" உதைப்பந்தாட்டப் போட்டி எதிர்வரும் சனி, ஞாயிறு தினங்களில்  அல் -  அஸ்ஹர் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.


ஒரு அணிக்கு 7 வீரர்கள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட இப் போட்டியில் நாடுபூராகவும் உள்ள பதிவுசெய்யப்பட்ட உதைபந்தாட்டக் கழகங்கள் பங்குபற்ற முடியும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இதற்கான விண்ணப்பப்படிவம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. ஒரு அணிக்கு இரண்டாயிரம் ரூபாய் பதிவுக்கட்டணம் அறவிடப்படும். விண்ணப்பப்படிவங்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 .30  மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.


"Thihariya Challenge Trophy" உதைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 40,000/= ரூபாய்கள் பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்படும். இரண்டாம் இடம் கிடைக்கும் அணிக்கு 20.000/= ரூபாய் பணப்பரிசும் கிண்ணமும் வழங்கப்படும். அத்துடன் சிறந்த கோல்கீப்பர், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான பரிசில்களும் வழங்கப்படவுள்ளதாக ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது. 

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்:
சிராஸ் : 0773953435
இபாம்: 0779142528
யாசர்: 0776087761

Post a Comment

Previous Post Next Post