ஹொரகொல்ல பகுதியில் பாடசாலை வேன் ஒன்று விபத்து. 11 மாணவர்கள் காயம்.


இன்று காலை நிட்டம்புவா ஹொரகொல்ல பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும்  வேன் ஒன்று பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளானதில் 11 மாணவர்கள் உட்பட வேன் சாரதியும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 

காயமடைந்த மாணவர்கள் 11 பேரும்  கவலைக்கிடமான நிலையில் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு பிரதான வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டுள்ளனர். 

கவனயீனமாக வேனைச் செலுத்திய சாரதி மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். - மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள் 

Post a Comment

Previous Post Next Post