உன்னிச்சை கிராமத்தில் 3 வீடுகள், ஒரு கடை, பள்ளிவாயல் என்பன தீ மூட்டப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.


உன்னிச்சை கிராமத்தைச் சேர்ந்த பெண் கோடாரியினால் நேற்று மாலை வெட்டி தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, உன்னிச்சை கிராமத்தில் 03 வீடுகள், ஒரு கடை, பள்ளிவாயல் என்பன தீ மூட்டப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்கப்பட்ட பெண்ணின் வீடு இன்று நல்லிரவு 2.00 மணியலவில் முற்றாக சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அப்பெண் வளர்த்து வந்த ஆடுகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் அப் பெண்ணின் கணவரான முஹம்மது சரீப் ஜெய்னுலாப்தீன் (வயது 67) ஸாஜில் நியூஸுக்கு தெரிவித்தார்.

இதேவேளை, உன்னிச்சை முஹ்யித்தீன் ஜும்ஆப் பள்ளிவாயலுக்கும் இரவோடு இரவாக தீ வைக்கப்பட்டுள்ளதுடன், பள்ளியின் முன்பகுதி முற்றாக எரிந்துள்ளதாகவும், மேலும் ஏனைய பகுதிகள் சேதமடைந்துள்ளதாகவும் உன்னிச்சை இருநூறுவில் முஸ்லிம் நலன்புரிச் சங்கத் தலைவர் எம்.எஸ். அப்துல் கபூர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்; 'உன்னிச்சை முஹ்யித்தீன் ஜும்ஆப் பள்ளிவாயல் எரிந்து கொண்டிருந்த போது, பொலிஸ், விஷேட அதிரடிப்படையினர் (STF) ஸ்தலத்திற்கு வந்து தீயை அணைத்துள்ளதாகவும் முஸ்லிம் நலன்புரிச் சங்கத் தலைவர் எம்.எஸ். அப்துல் கபூர் தெரிவித்தார்.தற்போது பொலிஸாரும்,

இரானுவத்தினரும் குவிக்கப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு உன்னிச்சைப் பிரதேசத்தை பிறப்பிடமாகவும் வன்செயலின் காரணமாக இடம்பெயர்ந்து, மீண்டும் உன்னிச்சைப் பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேறியுள்ளமையை இவர்களால் பொறுக்க இயலாமல் இவ்வாறான அடாவடித்தனங்களை மேற்கொண்டு வருவதாகவும் இருநூறுவில் முஸ்லிம் நலன்புரிச் சங்கத் தலைவர் எம்.எஸ். அப்துல் கபூர் மேலும் தெரிவித்தார். 

பள்ளியின் முன்னைய படங்கள்:



நன்றி  ZAJIL NEWS

Post a Comment

Previous Post Next Post