சிங்கள மொழி மூலம் கல்வி கற்ற முஸ்லீம் மாணவர்களிருந்து மார்க்க கல்வி கற்ற ஆலிம்களை உருவாக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட முதலாவது ஷரீஆஹ் உயர் கலாபீடமான தன்வீர் அகடமியின் வருடாந்த இப்தார் நிகழ்ச்சி இன்று தன்வீர் அகடமியில் நடைபெற்றது.
2009 மே மாதம் 24ஆம் திகதி திஹாரியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அகடமியில் தற்போது நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த 45 மாணவர்கள் விடுதியில் தங்கி கல்வி கற்கின்றனர். முழு நேர ஆசிரியர்கள் 05 பேரும் வருகை தரும் ஆசிரியர்கள் 07 பேரும் இங்கு கடமையாயாற்றிவருகின்றனர்.
2009 ஆம் ஆண்டு அகடமியில் அனுமதிக்கப்பட்ட 18 மாணவர்களில், 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த A /L பரீட்சைக்கு சிங்கள மொழி மூலம் தோற்றி 17 பேர் எல்லாப் பாடங்களிலும் சித்தியடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags
திஹாரிய செய்திகள்