2011 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள் வரலாற்றில் முதல் தடவையாக இணையத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
தேர்தல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள கீழே உள்ள இணையத்தள முகவரிக்குச் சென்று, தான் வாக்குரிமை பெற்ற குடிமகனா? என்பதை எந்த நேரத்திலும் இணையத்தளம் மூலம் அறிந்துகொள்ள முடியும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இணையத்தள முகவரி:
நீங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள மாவட்டம். மற்றும் உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வழங்குவதன் மூலம் சில நிமிடங்களில் வாக்காளர் விண்ணப்பபடிவத்திற்கு நீங்கள் வழங்கியுள்ள தகவல்களுடன், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த இணையத்தளத்தில் உங்கள் பெயர் இல்லாவிட்டால், அல்லது உங்கள் விபரங்கள் பிழையாக இருந்தால் அது தொடர்பாக அவ் இணையத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் செய்து, உங்களது சரியான தகவல்களை நிரப்பி, தேர்தல் செயலகம், சரண மாவத்தை, ராஜகிரிய. எனும் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.

anaiverukkum payenpadakkoodiyethu
ReplyDeletecome 2 my site is www.suncnns.com