ஹிஜ்ரி 1433 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை பார்த்து நோன்புப் பெருநாளை தீர்மானிக்கும் மாநாடு நாளை மறுதினம் (18) சனிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மத்ரஸதுல் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
நோன்புப் பெருநாளை தீர்மானிக்கும் வகையில் சனிக்கிழமை மஃரிப் தொழுகை நேரமாகிய 6.28 மணி தொடக்கம் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேட்டுக் கொள்கிறது.
அவ்வாறு தலைப்பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரிலோ அல்லது 011-5234044, 2432110, 2390783 மற்றும் 0777366099 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்பு கொண்டு அறியத் தருமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் பொதுச் செயலாளர் N. ஹஸன் கேட்டுக் கொள்கின்றார்.
உலமாக்கள், கதீப்மார்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள, ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள், பள்ளவாசல், தக்கியாக்கள், சாவியாக்களின் நிர்வாகிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்
