இம்முறை 2800 பேருக்கு மாத்திரமே ஹஜ் செவதற்கான வாப்புக் கிடைக்கும். மேலதிக கோட்டாக்கள் எதுவும் கிடைக்கப் பெற மாட்டாதென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷெக் வை.எல்.எம். நவவி தெரிவித்தார்.
இதேவேளை அதிக கட்டண அறவீடு காரணமாக முகவர் நிலையங்களூடாக ஹஜ் கடமை மறுக்கப்பட்டோர் எதிர்வரும் 17ம் திகதி திங்கட் கிழமைக்கு முன் தமது கடவுச் சீட்டுக்களை திணைக்களத்துக்கு வந்து கையளிக்குமாறும் அவர்களை ஹஜ்ஜுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
4,25,000க்கு மேல் ஹஜ் கட்டணம் அறவிடக் கூடாதென ஹஜ் முகவர்களுக்கு அமைச்சர் பௌஸி பணிப்புரை விடுத்துள்ளார். ஹாஜிகள் எவரும் உரிய கட்டணத்துக்கு மேல் செலுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்றும், அனுமதி மறுக்கப்பட்டோர் திணைக்களத்தினூடாக அனுப்பி வைக்கப்படுவர் என்றும் அமைச்சர் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
ஏற்கனவே அறவிடப்பட்ட 25,000 ரூபா முற்பணத்தை விரும்பியவர்கள் திணைக்களத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியுமென்றும் பணம் மீள வழங்கப்பட்டாலும் தமது பயணத்தை உறுதிப்படுத்துமிடத்து ஹாஜிகளின் பதிவு இரத்துச் செயப்பட மாட்டாதென்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இம்முறை ஹஜ் கடமைக்குச் செல்வோருக்கு ஹஜ் தொடர்பான விடயங்கள் தொடர்பாக அறிவுறுத்தும் விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் கொழும்பு, அம்பாறை, மட்டக்களப்பு, கண்டி ஆகிய இடங்களில் நடாத்தப்படவுள்ளன. கொழும்பில் இரண்டு இடங்களில் இக் கருத்தரங்கினை நடாத்துவதற்கும் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணிகளை ஏற்றிச் செல்லும் முதல் விமானம் இம்மாதம் 27ம் திகதி புறுப்பட்டுச் செல்லவுள்ளது.
