கடந்த செப்டம்பர் 2 ஆம் திகதி 2012 அன்று வெளியான நவமணி பத்திரிகையில் இருந்து ஒரு ஆக்கம் உங்கள் கவனத்திற்கு ...
[click on photo to enlarge ]
எம்மால் மனிதர்களை வணங்க முடியாது. அவ்வாறு மனிதர்களை வணங்க முடியுமென்றால் பெளத்த பிக்குமாரையே நான் வணங்குவேன் என்று பிரபல கலீல் மௌலவி தெரிவித்துள்ளார். பௌத்தர்கள் பயங்கரவாதிகளோ இனவாதிகளோ அல்லர் என்று அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் திருகோணமலை புல்மோட்டையில், இடம்பெற்ற பொதுகூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்; புனித ரமழான் மாதத்தில் முஸ்லீம்களுக்காக கஞ்சி காய்ப்பதற்கு பெளத்த ஆலயமொன்றில் காணியை ஓதிக்கித் தந்தமைக்காகவே இவ்வாறு தலைவணங்குவதாகவும் அவர் தெரிவித்தார் பௌத்தர்கள் பயங்கரவாதிகளோ அல்லது தீவிரவாதிகளோ இனவாதிகளோ பழிவாங்குபவர்களோ அல்லர். அத்துடன் பெளத்த மதகுருமார்கள் ஒருபோதும் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படவும் இல்லையென்றும் அவர் தெரிவித்தார். நாங்கள் கொள்கையடிப்படையில் பல மாதங்களாக பிரிந்து செயற்பட்டாலும் நாங்கள் சிங்களவர்களே என்றும் அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் உட்பட உலமாக்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
