இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது தொடர்பில் ஜம்இயதுல் உலமாவின் எச்சரிக்கை!!


மனிதர்களுக்கான இறைவனின் இறுதித் தூதரை மிகக் கேவலமாக சித்தரித்துள்ள திரைப்படத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது . அந்த மோசமான கட்சிகளை ஏனையவர்களும் பார்க்கும் விதமாக எமது வாலிபர்கள் இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது இஸ்லாமிய ஷரியாவில் முற்றாக தடுக்கப் பட்டுள்ளது என்றும் அவற்றில் இருந்து அனைவரும் முற்றாக விலகியிருக்குமாறு அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் செயலாளர் மௌலவி தாஸீம் கோரியுள்ளார் .

முஸ்லிம் உம்மா நற்பண்புகள் ,சிறந்த முன்மாதிரிகள் , ஒழுக்க விதிகள் ஆகியவற்றின் மீது நிறுவப்பட்டுள்ளது. வெளிவந்துள்ள திரைப்படங்களை தயாரிக்கும் சக்திகள் எந்த வகையிலும் எந்த ஒழுக்க விதிகள் ,பண்பாட்டு விதிகள், என்பனவற்றுக்கு கட்டுப்பட்டவை அல்ல , அத்தகையவர்கள் தமது தாயுடன் ,சகோதரியுடன் உறவு கொள்வதற்கும் , மனைவியுடன் உறவு கொள்வதற்கும் இடையில் எந்த வித்தியாசத்தையும் காண தெரியாதவர்கள்.

இஸ்லாம் போதிக்கும் அழகிய பண்பாடுகள் , நற்பண்புகள் , ஒழுக்க விதிகள் என்பன ஒழுக்கமற்ற, பண்பற்ற ,பண்பாடுகள் அறியாத கூட்டத்திடம் இருந்து எம்மை வித்தியாசப் படுத்துகிறது. அவர்கள் செய்வதை நாமும் செய்யமுடியாது . குறித்த திரைப்படத்தால் உருவாகியுள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாம் மற்றவர்களுக்கு இஸ்லாத்தை அதன் தூதை தெளிவாக முன்வைக்க முயற்சிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார் .

Post a Comment

Previous Post Next Post