இஸ்லாத்திற்கும், இறுதித் தூதரான முஹம்மது நபிக்கும் மாசு கற்பிக்கும் விதமாக வெளிவந்துள்ள யூ டியூப் வீடியோவை நீக்க இயலாது என கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.
இந்தப் படத்தின் சில பகுதிகள் யூடியூப்பில் வெளியானதையடுத்து உலகின் பல நாடுகளீல் கலவரம் வெடித்து. இதில் லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த வீடியோவை நீக்குமாறு அமெரிக்க அரசு கூகுள் நிறுவனத்திற்கு வேண்டுகோள் விடுத்தது. ஆனல் தற்போது பதிவேற்றப்பட்டிருக்கும் காட்சிகள் எமது நிறுவன நிபந்தனைகளுக்குட்பட்டது எனவே இதை நீக்க இயலாது என மறுத்துள்ளது.
Tags
உலகச் செய்திகள்
