இறுதித் தூதரை மோசமாக சித்தரிக்கும் படத்தை எடுத்தவர் வேறொரு வழக்கிற்காகவே கைது செய்யப்பட்டார்!!



முஸ்லீம்களை புண்படுத்தும் வகையில் சர்ச்சைக்குறிய திரைப்படத்தை எடுத்தவர் என்று சந்தேகிக்கப்படும் நபர் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்க லாஸ் ஏஞ்சலிஸ் நீதிபதி ஒருவர் உத்தரவிட்டார்.

இறுதித் தூதரை இழுவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டிருந்த திரைப்படத்திற்கு  உலகம் முழுவதிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்தவண்ணம் உள்ளது.

இத்திரைப்படத்தை எடுத்ததாக சந்தேகிக்கப்படும் நகூலா பேஸ்ஸெலி நகூலா என்பவர் 2010 ஆம் ஆண்டு மோசடி ஒன்றில் ஈடுபட்டதற்காக தண்டனை பெற்றவர். அந்த வழக்கின் ஜாமீன் நிபந்தனைகளை மீறியதால் அவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இன்னசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் என்ற படத்தின் 13 நிமிட முன்னோட்டம் யூ டியூப்பில் வெளியிடப்பட்டதை அடுத்து உலகின் பல இடங்களில் அமெரிக்காவுக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்தன. இதில் பலர் கொல்லப்பட்டனர்.

இதனிடையே இந்தப் படத்தை தயாரித்த நபரைக் கொல்பவருக்கு சொந்தப் பணத்தைக் கொடுத்து ஒரு லட்சம் டாலர்கள் வெகுமதி அளிக்கப்போவதாக தனிப்பட்ட முறையில் பிரகடனம் செய்திருந்த பாகிஸ்தானினின் ரயில்வே அமைச்சர் குலாம் அகமது பிலூர், தான் செய்தது சரிதான் என்று பிபிசிக்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post