‘மனிதாபிமாத்தால் உலகை வென்ற உத்தம முஹம்மத் நபி’ எனும் தலைப்பில் முஸ்லிமல்லாதவர்கள் மட்டும் பங்குபற்றக் கூடிய சிங்கள மொழிமூல கட்டுரைப் போட்டியொன்றை Forum for Religious and Cultural Studies (FRCS) ஏற்பாடு செய்துள்ளது.
முஸ்லிமல்லாத சிங்கள மக்கள் மத்தியில் முஹம்மத் நபியவர்களைப் பற்றிய தேடலை அதிகப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கட்டுரை போட்டியை உங்கள் முஸ்லிமல்லாத சிங்கள நண்பர்களுக்கு அறிமுகமானவர்களுக்கு தெரியப்படுத்துமாறும் அவர்களை ஆர்வமூட்டுமாறும் பணிவாக வேண்டிக்கொள்கின்றோம்.
இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத் நபியவர்களை அவமானப்படுத்தி வெளியிடப்பட்ட வீடியோ, கேலிச் சித்திரங்கள் ஆகியன உலகத்தில் இரண்டு வகை விளைவுத் தாக்கங்களை ஏற்படுத்தின.
அதில் ஒரு வகை, விமர்சனத்திற்கும் மீளாய்வுக்கும் உரியது. ஏனெனில் அது முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் விட்டு ஏனையோரை விரண்டோடச் செய்யுமளவு கடுமையானவை.
இரண்டாம் வகை அங்கீகாரத்துக்கும் ஆர்வமூட்டலுக்கும் உரியது. இது ஏனையோர் இஸ்லாத்தினால் ஈர்க்கப்படுவதற்கும் முஸ்லிம்களைப் பற்றிய நல்லெண்ணம் வார்க்கப்படுவதற்கும் துணை நிற்பவை.
இவற்றில் இரண்டாம் வகையைச் சார்ந்த அவசியம் ஆர்வமூட்டப்பட வேண்டிய, பிரபலப்படுத்தப்பட வேண்டிய முயற்சியொன்றை முன்னெடுத்துள்ள FRCS நிறுவனத்தாரின் இக் கட்டுரைப் போட்டி ஏற்பாடு அனைவரின் பாராட்டுக்கும் பரவலாக்கப்படலுக்கும் உரியது.
இம் முயற்சியில் பங்களிப்பு வழங்கக் கிடைத்ததையிட்டு ThihariyaNews.Com மகிழ்ச்சியடைகின்றது. மேலும், FRCS நிறுவனத்தாரின் பணிகள் சேவைகள் வெற்றிபெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து வாழ்த்துகின்றோம்.
நன்றி - www.puttalamonline.com

அஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteமகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு சமூக வலைத்தளத்தில் காணப்பட்ட விடயத்தின் தேசிய பெருமானத்தை மிகச் சரியாக அளந்து இந்தத் தளத்தில் பிரசுரித்ததமை, எதிர்காலத்தில் முஸ்லிம், முஸ்லிமல்லாத என்ற பாகின்றி இலங்கை சமூகங்களின் இணக்கத்தைக் கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது. உங்கள் பணி தொடர வாழ்த்துகின்றேன்.