அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை திணற வைத்த கடை உரிமையாளர்


அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா புளோரிடாவிலுள்ள பீஸா கடை யொன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்த போது அதன் உரிமையாளர் மகிழ்ச்சி மேலீட்டால் ஒபாமாவைக் கட்டியணைத்துத் தூக்கி அவரை திணற வைத்துள்ளார். பிக் அப்பிள் பீஸா கடை உரிமையாளரான ஸ் கொ ட் வான் டுஸொ ரே இவ்வாறு ஒபாமாவை ஆரத் தழுவி தூக்கி அவர் மீது தனக்கிருந்த அபிமானத்தை வெளிப்படுத்தியுள்ளார்.



இதன்போது ஸ் கொ ட் வான் டுஸொர் (46 வயது) ஜனநாயகக் கட்சிக்காகவன்றி ஒபாமாவுக்காகவே வாக்களிப்பதாகத் தெரிவித்தார். ஒபாமாவுடன் இருப்பதை தான் மிகவும் சௌகரியமாக உணர்வதாக அவர் கூறினார்.


மேற்படி பீஸா கடையில் 20 நிமிடங்களைச் செலவிட்ட பராக் ஒபாமா, கட்டணம் செலுத்தி 20 பீஸாக்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post