ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (ஜம்மிய்யத் தலபா) திஹாரிய கிளை வருடாவருடம் நடாத்தும் எப்படி பரீட்சைக்கு முகம் கொடுப்பது? எவ்வாறு கற்பது? என்ற இலவச கருத்தரங்கு இன்று (28-09-2012) அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இஸ்லாஹியா அரபுக் கல்லூரி விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அப்துல் வஹாப் (இஸ்லாஹி) அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இக் கருத்தரங்கில், அல் அஸ்ஹர் சார்பாக பிரதி அதிபர் திருமதி சஹ்தியா ஆசிரியை கலந்து சிறப்பித்தார்.
இன்றைய இந்த கருத்தரங்கில் இம்முறை க.பொ த சாதாரண பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் சுமார் 118 பேர் கலந்துகொண்டனர்.
Tags
திஹாரிய செய்திகள்