அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்


மனிதர்களுக்கான இறுத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் இஸ்லாத்தையும் அவமதிக்கும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று புதன்கிழமை பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் ஏற்பாடு செய்திருந்த இவ்ஆர்ப்பாட்டத்தில்  பெருந் தொகையானவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இன்று பி.ப 1.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரெயில்வே நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் சகிதம் உட்பட பெருந்தொகையானவர்கள் காலிமுகத்திடலூடாக அமெரிக்கத் தூதரகத்தை அடைய முற்பட்டனர். எனினும் அவர்கள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக

இஸ்லாத்துக்கு எதிராகத் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை அமெரிக்கா உடனடியாக தடை செய்ய வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.



www.Lankamuslim.org


Post a Comment

Previous Post Next Post