மேல் மாகாண சபை மூன்றாவது முறையாகவும் நடாத்திய சுயதொழில் வேலை வாய்ப்பு பயிற்சிநெறியின் ஆரம்ப நிகழ்வு நேற்று மாலை 3 மணியளவில் திஹாரிய அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
மேல் மாகாண சபை உறுப்பினர் அல் ஹாஜ் சாபி ரஹீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் நடைபெற்ற இப்பயிற்ச்சி நெறியில் இம்முறை கைப்பணிக்கலை மற்றும் பேக் தைத்தல் போன்ற சுயதொழில் வேலைவாய்ப்புகளை தொழில் ரீதியாக செய்வதற்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இன் நிகழ்வில் மேல் மாகாண சபை உறுப்பினர் அல் ஹாஜ் சாபி ரஹீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் திஹாரிய கிளை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
Tags
திஹாரிய செய்திகள்




