“முஸ்லிம்களின் அப்பாவித்தனம்" என்ற திரைப்படத்தின் சில காட்சிகள் சுவர்ணவாகினி செய்தியில் சுவர்ணவாகினியில் ஒளிபரப்புச் செய்யப்பட்டமைக்கு அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சுவர்ணவாகினி நிர்வாகத்திடம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு 8:00 மணி செய்தியில் குறித்த படத்தின் காட்சிகள் ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளது .
இதற்கு ஜம்இயதுல் உலமா முஸ்லிம் கவுன்சில் என்பன தனது கண்டனத்தை நேரடியாக தெரிவித்துள்ளது . அதன் போது சுவர்ணவாகினி நிர்வாகம் சார்பாக பேசிய ஒருவர் அந்த காட்சிகளின் பாரதூரம் தமக்கு தெரியாது என்றும் அதற்காக தான் மனம் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளதாக அகில இலங்கை ஜம்இயதுல் உலமா செயலாளர் மௌலவி தாஸீம் எம்மிடம் தெரிவித்தார்.
நன்றி :www.lankamuslim.org
