இந்தியாவின் பிரபல செல்வந்தரும் கிங் ஃபிஷர் விமானப் போக்குவரத்து நிறுவன உரிமையாளருமான விஜய் மல்லையாவுக்கு தென்னிந்திய நீதிமன்றம் ஒன்று கைது ஆணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
விஜய் மல்லையா கொடுத்த கிட்டத்தட்ட இருபது லட்சம் டாலருக்கான காசோலைகள் அவரது வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாத காரணத்தால் திருப்பிவந்த விவகாரம் தொடர்பில் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம் தொடுத்துள்ள வழக்கில் இந்த பிடி வாரண்ட் வழங்கப்பட்டுள்ளது. கிங் ஃபிஷர் விமானப் போக்குவரத்து நிறுவனம் வாங்கிய கடன்களை திருப்பிக்கொடுக்க முடியாமல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. சம்பளம் கிடைக்காமல் ஆத்திரமடைந்த இந்நிறுவன ஊழியர்கள் வரிசையாக வேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்தியிருந்தனர். ஃபார்முலா ஒன் அதிவேக கார் பந்தய அணி ஒன்றை மல்லையா வைத்திருக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
நன்றி : BBC தமிழ்
Tags
உலகச் செய்திகள்
