மியன்மாரில் முஸ்லிம்கள் மீது மீண்டும் தாக்குதல், 20க்கும் மேற்பட்டோர் பலி

மியன்மாரின் மேற்கு மாநிலமான ரகினெவில் மீண்டும் ஏற்பட்டுள்ள இனக் கலவரத்தில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டிருப்பதாக மாநிலத்திற்கான பேச்சாளர் நேற்று அறிவித்தார். எனினும் தற்போதைய வன்முறைகளில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு மடங்காக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ரகினெ மாநில அரசின் பேச்சாளர் ம்ஸோ தன்ட் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு கூறும்போது, ‘கடந்த ஒக்டோபர் 21 ஆம் திகதி தொடக்கம் இடம்பெற்று வரும் கலவரங்களில் இரு தரப்பினரையும் சேர்த்து குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டுள்ளார்.

எனினும் மரண எண்ணிக்கை 50 ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’ என்றார். இந்த வன்முறைகளில் 80 ரகினெ இன பெளத்தர்கள் காயமடைந்திருப்பதாக கூறிய அவர் காயமடைந்த முஸ்லிம்களின் விபரத்தை குறிப்பிடவில்லை.

இந்நிலையில் மியன்மாரில் ஏற்பட்டுள்ள புதிய இனக்கலவரம் குறித்து அவதானத்துடன் இருப்பதாக ஐ.நா. கூறியுள்ளது. இந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தி ருப்பதாகவும் ஐ.நா. கூறியுள்ளது.

இதனிடையே மியன்மாரில் மீண்டும் இனக்கலவரம் பரவியுள்ள நிலையில் மேற்கு மாநிலமான ரகினெவின் இரு நகரங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது.

ரொஹிங்கியா முஸ்லிம்கள் மற்றும் ரகினெ இன பெளத்தர்களுக்கும் இடையிலான மோதல் மேலும் இரு மாவட்டங்களில் பதிவாகியுள்ளன. இந்நிலையில் பியா மற்றும் ம்ரவுக் ஊ நகரங்களில் பொலிஸார் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளனர். இந்த கலவரம் குறித்து இரு தரப்பும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வருகின்றன.

முன்னர் கடந்த ஜூனில் ஏற்பட்ட கலவரத்தில் பலர் கொல்லப்பட்டதோடு ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந் தனர்.

Post a Comment

Previous Post Next Post