லக்பிமையில் வெளியான "பர்தாவில் இருந்து தப்பி புத்தகத்துக்கு வந்த கதைகள்''



இலங்கையில் வெளிவரும் சிங்கள தேசிய நாளேடுகள் அண்மைக் காலமாக திட்டமிட்ட முறையில் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் இழிவுபடுத்தும் வகையிலான ஆக்கங்கள், செய்திகள், கட்டுரைகளைப் பிரசுரித்து வருவதை யாவரும் அறிவீர்கள். தற்போது அவை பிரசுரமாகும் வீதமும், அவற்றின் வீரியமும் அதிகரித்த வண்ணமே உள்ளன. 

எல்லா பத்திரிகை தர்மங்களையும் மீறி, முஸ்லிம் இனத்துவத்தை அடையாளம் காட்டுவதில் குறியாக நின்று செய்திகளை முற்பக்கத்தில் வெளியிடுவதோடு மாத்திரம் நிறுத்திக் கொள்ளாது, இஸ்லாத்திற்கு எதிராக மேற்கத்தேய ஊடகங்கள் செய்யும் மட்டரக  பிரச்சாரங்களைத் தேடி, அவற்றை பக்கம் பக்கமாக சிறப்புக் கட்டுரை வடிவில் பிரசுரித்துத் தள்ளுகின்றன.  

திவயின, லக்பிம, ரிவிர, அத மற்றும் மவ்பிம  போன்ற பத்திரிகைகளில் வெளியாகும் முஸ்லிம் விரோத ஆக்கங்களைப் பார்த்தால் அவற்றின் பின்னால் மிகப் பலமான பின்புலங்கள் இருப்பதாக எண்ணத் தோன்றுகிறது. இவற்றைத் தொடர்ச்சியாக தேசிய நாளிதழ்களில் வெளிக் கொணர்ந்து அப்பாவி சிங்களவர்கள் மத்தியில் முஸ்லிம்களைப் பற்றி மிக மோசமான பதிவை ஏற்படுத்தும் நேக்கில் செய்யப்படக் கூடிய இந்நடவடிக்கைகளுக்குத் தாராளமாகவே பணம் செலவழிக்கப் படுவதாக எண்ணத் தோன்றுகின்றது.

அந்த வகையில் தான், ஞாயிறு லக்பிம பத்திரிகையில் இவ்வாரம் வெளியான திருமதி இமாளி எரங்கா கோடேவத்த ஆரச்சி என்பவரால் எழுதப்பட்ட "பர்தாவில் இருந்து தப்பி புத்தகத்துக்கு வந்த கதைகள் - பர்தாவலின் மிதீ பொத்வலட்ட ஆ கதந்தர" எனும் தலைப்பில் வெளியான கட்டுரையாகும். இது முஸ்லிம் நாடுகளில் பெண்கள் படும் அவஸ்தைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சிங்களத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ள 50 வேற்றுமொழி நாவல்கள்  நாவல்களை அறிமுகப்படுத்தும் தொடர் கட்டுரையாகும். இஸ்லாத்தில் பெண்ணுரிமையை மிக மோசமாக விபரிக்கும் இக்கட்டுரையானது அதிவிமர்சனத்திற்குரியது.

எனவே, பத்திரிகை தர்மங்களில் சகல வரையறைகளையும் மீறும் இவ்வாறான கட்டுரைகளை வெளியிடும் இப்பத்திரிகையின் பிரதம ஆசிரியரைத் தொடர்பு கொண்டு இது தொடர்பான எமது கவலையையும், எதிர்ப்பையும் தெரிவிக்க வேண்டும். அத்துடன் மேற்படி கட்டுரையாலரின் இவ்வாறான கட்டுரைகளை தொடர்ந்தும் பிரசுரிப்பது இனங்களுக்கிடையிலான நல்லெண்ணத்தை தகர்த்து ஏறிவதுடன், மேற்படி பத்திரிகையில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் வைத்துள்ள நல் எண்ணத்தையும் பாதிக்கும் என்பதையும் உணர்த்த வேண்டும். 

எனவே, லக்பிம பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அவர்களை எனும் இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பலரும் எமது முறைப்பாடுகளை மிகவும் கெளரவமான முறையில் தெரிக்கவும்.

சுந்தர நிஹத்தமான த மெல்  - 0112-2426020 / 0773228461

அத்துடன் சிங்களத்தில் இஸ்லாம் பற்றி எழுதும் ஆற்றல் உள்ளவர்கள், இப்பத்திரிகைகளில் தமது ஆக்கங்களுக்கு இடத்தைப் பெற்றுக்கொள்ளவதற்கான வழிமுறைகளையும் சிந்திக்க வேண்டும். 

நன்றி : யாழ் முஸ்லிம்

Post a Comment

Previous Post Next Post