கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிடமாக இருந்த சியரை கோறளை மேற்கு, திஹாரிய பிரதேச முஸ்லிம் விவாகப் பதிவாளராக ஓய்வுபெற்ற ஆசிரியர் மௌலவி எம்.டி.எம் மன்சூர் அவர்கள் 10 -10 -2012 ஆம் திகதி முதல் பதிவாளர் நாயகம் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் 2009 மார்ச் 15 ஆம் திகதி முதல் 2012 ஏப்ரல் 30 ஆம் திகதி வரை சியரை கோறளை மேற்கு, திஹாரிய பிரதேச முஸ்லிம் காதியார் ஆக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் விவாகப் பதிவாளர் திஹாரிய நியூஸ் இணையத்தளத்திற்கு விடுத்த விசேட வேண்டுகோள்:
ஒரு விவாகப் பதிவின்போது ஏற்படக்கூடிய தவறுகளையும், நேரம் விரயமாவதை தவிர்ப்பதற்கும் திருமணப் பதிவு நடைபெறவிருக்கும் தினத்திற்கு குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பதாக உரிய விண்ணப்பத்தை கையளிக்கும்படி கேட்டு கொண்டார்.
ஒரு திருமணப்பதிவுக்காக:
01 . முறையான, தகுதியான "வலி" இருக்கவேண்டும்.
02 . தமது பிரதேச ஜும்ஆப் பள்ளிவாயல் நிர்வாக சபை மூலம் உறுதி செய்யப்பட்ட கடிதம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். அதில் அந்தஸ்து அதாவது திருமணமானவரா, இல்லையா என்பது பற்றி குறிப்பிடப்படல் வேண்டும்.
இவை இல்லாத எந்தத் திருமணப்பதிவும் நடைபெற மாட்டது என்று அவர் திஹாரிய நியூஸ் இணையத்தளத்திற்கு கூறினார்.
Tags
திஹாரிய செய்திகள்
