இந்தியாவின் முதல் கண்ணாடி பள்ளிவாயல்.


இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரின் தலைந்கரமான ஷில்லாங்கில் இந்தியாவின் முதல் கண்ணாடி பள்ளிவாயல்  உருவாக்கப்பட்டுள்ளது.


இப்பள்ளிவாயல் உருவாக்கத்தில் பங்கு வகித்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சயீதுல்லா இப்பள்ளியைக் கட்ட ஒன்றரை வருடங்கள் ஆனது என்றும் வடகிழக்கு இந்தியாயில் உள்ள மிகப் பெரிய பள்ளி இது என்றும் கூறினார்.

ஷில்லாங்கில் உள்ள உம்ஷிரிபி ஆற்றின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள நான்கு தளங்களை கொண்டுள்ள  இப்பள்ளிவாயல் 120 அடி உயரமும் 61 அடி அகலமும் கொண்டுள்ளது. இரவில் பள்ளிவாயலின் கண்ணாடிகள் ஒளிர்வது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பள்ளிவாயலின்  உள்ளேயே மெஹர்பா எனும் அனாதை காப்பகமும் நூலகமும் இஸ்லாத்தை குறித்து விவாதிப்பதற்கான மர்கசும் அமைக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் அக்டோபர் 18 அன்று மத்திய சட்ட மற்றும் சிறுபான்மையினருக்கான அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் துணை அமைச்சர் வின்செண்ட் இப்பல்லிவாயலை திறந்துவைக்கவுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post